'லவ் ஷாதி ட்ராமா': ஓடிடியில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண வீடியோ!

'லவ் ஷாதி ட்ராமா': ஓடிடியில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண வீடியோ!

நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ விரைவில் முன்னணி ஓடிடி தளம் ஒன்றில் வெளியாக உள்ளது.

நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த ஆண்டு டிச. 4-ம் தேதி தனது சிறுவயது நண்பரான சோஹைல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் அவரது திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அவரது திருமண வீடியோ க்ளிம்ப்ஸ் மற்றும் புகைப்படங்கள் அப்போது சோஷியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிலையில், அவரது திருமண வீடியோ தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதற்கு, ‘லவ் ஷாதி ட்ராமா’ என பெயரிட்டுள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோவை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹன்சிகா விரைவில் இது டிஸ்னி+ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பதையும் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் நடிப்பேன் என்பதை முன்பு அறிவித்திருந்த ஹன்சிகா கைவசம் தற்போது ‘கார்டியன்’, ’ரெளடி பேபி’ உள்ளிட்டப் பல படங்கள் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in