
நடிகை ஹன்சிகா தலைகீழாகத் தொங்கி கடினமான உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா தமிழிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு சோஹேல் கதூரியா என்பவருடன் திருமணம் நடந்தது. தன் தோழியின் கணவர் சோஹேல் என்பதும் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டு ஹன்சிகா இவரைத் திருமணம் செய்து கொண்டார் எனவும் பலர் வதந்திகள் அந்த சமயத்தில் வெளியானது. ஆனால் அது குறித்து ஹன்சிகா எதுவும் பதில் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார். தற்போது சினிமா, குடும்பம் என பிசியாக நடித்து வரக்கூடிய ஹன்சிகா தமிழில் கடைசியாக நடிகர் ஆதியுடன் 'பார்ட்னர்' என்ற திரைப்படத்தில் நடித்தார்.
தற்போது ’ரவுடி பேபி’, ’கார்டியன்’, ’காந்தாரி’ உள்பட ஆறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் ஜிம்மில் தலைகீழாக தொங்கி வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில் அவை ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.