‘இப்போதும் எப்போதும்...’ - ஈபிள் கோபுரம் முன்பு காதலருடன் நடிகை ஹன்சிகா!

‘இப்போதும் எப்போதும்...’ - ஈபிள் கோபுரம் முன்பு காதலருடன் நடிகை ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வானி, அவரின் வருங்கால கணவர் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவுடன் பாரிஸில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

பாரிஸில் உள்ள உலக அதிசயமான ஈபிள் கோபுரத்தின் முன்பு தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்ட ஹன்சிகா, "இப்போதும் & எப்போதும்" என்று எழுதியுள்ளார். நடிகை ஹன்சிகா தனது நண்பரும், தொழிலதிபருமான சோஹேலை டிசம்பர் முதல் வாரத்தில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ‘வேலாயுதம்’, ‘மாப்பிள்ளை’, ‘வாலு’, ‘ சிங்கம் 2’, ’மான் கராத்தே’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in