பிரபல நடிகையின் இன்ஸ்டா கணக்கு முடக்கம்

பிரபல நடிகையின் இன்ஸ்டா கணக்கு முடக்கம்
காயத்ரி ஷங்கர்

பிரபல நடிகை காயத்ரி ஷங்கரின் இன்ஸ்டாகிராம் கணக்கை மர்மநபர்கள் முடக்கியுள்ளனர்.

சினிமா பிரபலங்கள், சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் சமூகவலைதளப் பக்கங்களை மர்ம நபர்கள் ஹேக் செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை சிலர் ஹேக் செய்யததாகத் தெரிவித்திருந்தார். ’ஹேக் செய்யப்பட்ட எனது கணக்கை மீட்டுவிட்டேன். என் கணக்கில் இருந்து செய்திகள் வந்திருந்தால், தயவுசெய்து அதை தவிர்க்கவும்’ என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை காயத்ரி ஷங்கரின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் மர்மநபர்கள் முடக்கியுள்ளனர். தமிழில், ’18 வயசு’படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இவர். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், பொன்மாலைப் பொழுது, ரம்மி, புரியாத புதிர் உட்பட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை மர்மநபர்கள் முடக்கியுள்ளது பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், எனது இன்ஸ்டாகிராம் கணக்கு மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது. அதை மீட்கும் பணி நடந்து வருகிறது. எனது கணக்கில் இருந்து ஏதும் செய்தி வந்திருந்தால், அதைப் புறக்கணிக்கவும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.