சித்தார்த் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற அதையும் செய்வேன்: அதிர்ச்சி கிளப்பிய இளம் நடிகை

சித்தார்த் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற அதையும் செய்வேன்: அதிர்ச்சி கிளப்பிய இளம் நடிகை

நடிகர் சித்தார்த் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற அவருடன் படுக்கையை பகிரவும் தயாராக இருப்பதாக நடிகை ஒருவர் சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான காயத்ரி ரமா தான் இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொல்லி இருக்கிறார். சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்மெண்ட் குறித்து பல்வேறு நடிகைகள் மீடூ புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை காயத்ரி ரமா அட்ஜஸ்மெண்ட்டுக்கு ஆதரவாக பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அட்ஜஸ்மெண்ட் செய்வது தவறில்லை என்றும் அது அவரவரின் விருப்பம் என்றும் பேசியுள்ள காயத்ரி ரமா, தனக்கு நடிகர் சித்தார்த் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற யாரேனும் படுக்கையை பகிர சொன்னாலும், அதை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

அவரின் இந்த பேச்சு தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சமூக வலைதளங்களில் இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in