கையில் மயில் இறகு... நெற்றியில் நாமம்... புதுகெட்அப்பில் நடிகை காயத்ரி ரகுராம்!

புதுகெட்அப்பில் நடிகை காயத்ரி ரகுராம்
புதுகெட்அப்பில் நடிகை காயத்ரி ரகுராம்

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் திருப்திக்கு சென்று மொட்டை போட்டுள்ளார். தனது புதுகெட்அப் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இதையடுத்து பாஜகவில் இருந்து தான் விலகுவதாக சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராகவும், தமிழக பாஜகவுக்கு எதிராகவும் பல அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் திருப்பதி சென்ற நடிகை காயத்ரி ரகுராம், அங்கு மொட்டை அடித்துள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in