`பைத்தியக்காரத்தனமான தைரியம்’: பிரபல நடிகையின் ஸ்கைடைவிங் அனுபவம்!

`பைத்தியக்காரத்தனமான தைரியம்’: பிரபல நடிகையின் ஸ்கைடைவிங் அனுபவம்!

பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஸ்கைடைவிங் புகைப்படங்களும் வீடியோவும் வேகமாக பரவி வருகிறது.

போதை ஏறி புத்தி மாறி, சார்பட்டா பரம்பரை, அன்புள்ள கில்லி படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். இப்போது வசந்தபாலன் இயக்கியுள்ள அநீதி, பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படங்களில் நடித்து வருகிறார். துபாய் சென்றுள்ள நடிகை துஷாரா, அங்கு விமானத்தில் இருந்து குதித்து தைரியமாக, ஸ்கை டைவிங் சாகசம் செய்துள்ளார்.

அந்தப் புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில், சில நேரங்களில் உங்களுக்குத் தேவை, பைத்தியக்காரத்தனமான தைரியம் மட்டுமே. அதில் சிறப்பானது வெளிப்படும் என்று உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்கைடைவிங் வீடியோ ஒன்றையும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள அவர், ’என் முகத்தில் தெரியும் இனம் தெரியாத உணர்வை அனுபவிக்கவும் என்று கூறியுள்ளார். மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர் இன்னும் பறப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நடிகை பார்வதி திருவோத்து, ஈஷா ரெப்பா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் இந்த ஸ்கைடைவிங் சாகம் செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in