மீண்டும் நடிக்க வரும் ‘வேதம்’ நாயகி!

திவ்யா உன்னி
திவ்யா உன்னி

தமிழ், மலையாளம், தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் திவ்யா உன்னி. நடன கலைஞருமான இவர், தமிழில், 'கண்ணன் வருவான்', 'சபாஷ்', 'பாளையத்து அம்மன்', 'வேதம்', 'ஆண்டான் அடிமை' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சுதிர் சேகரன் என்பவரை 2002-ம் ஆண்டு திருமணம் செய்த இவர், 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அடுத்து அமெரிக்காவில் வசிக்கும் அருண் குமார் என்பவரை 2018 -ல் மறுமணம் செய்துகொண்டார்.

இப்போது அமெரிக்காவில் வசிக்கும் திவ்யா உன்னி, அங்கு நடனம் கற்றுக்கொடுக்கிறார். அவர் மீண்டும் நடிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறிய அவர், “சினிமாவோடு இருந்த தொடர்பை விடவே இல்லை. ரிலீஸ் ஆகிற புதிய படங்களைத் தொடர்ந்து பார்க்கிறேன். சில பொறுப்புகள் காரணமாக, இடையில் நடிப்பைக் கைவிட வேண்டியதாகிவிட்டது. சரியான நேரம் வரும்போது மீண்டும் நடிக்கத் தொடங்குவேன்” என்றார்.

மேலும், “இப்போதெல்லாம் இயக்குநர்களிடம் ஸ்கிரிப்ட் கேட்டு நடிக்கிறார்கள். நான் பிசியாக இருந்தபோது அப்படி செய்ததில்லை. மூத்த இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கிறேன். அவர்களிடம் ஸ்கிரிப்ட் கேட்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை. எல்லோரும் நல்ல கேரக்டர்களை கொடுத்தார்கள். மோகன்லாலுடன் நான் நடித்த ’உஸ்தாத்’ என்ற மலையாளப் படத்தின் கேரக்டரை இப்போதும் ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலம் நினைவுகூர்கிறார்கள். அதுபோன்ற நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் சினிமாவுக்கு மீண்டும் வருவேன்” என திவ்யா உன்னி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in