அதிர்ச்சி... விமானத்தில் பிரபல நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்! குடிபோதையில் இளைஞர் கலாட்டா!

 நடிகை திவ்ய பிரபா
நடிகை திவ்ய பிரபா

மலையாள நடிகை திவ்ய பிரபா விமானத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நடிகை திவ்யா பிரபா நேற்று அக்டோபர் 10-ம் தேதி மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா ஃபிளைட்டில் பயணித்த போது, சக பயணியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதையும் இதற்காக காவல் துறையில் புகார் அளித்துள்ளது பற்றியும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்துள்ள புகாரில், ‘என் அருகில் குடித்து விட்டு அமர்ந்திருந்த சகபயணி ஒருவர், எந்தவிதமான லாஜிக்கும் இல்லாமல் விவாதம் செய்ய ஆரம்பித்தார். என்னை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார். இதுகுறித்து, நான் விமானப் பணிப்பெண்ணிடம் புகார் அளித்த போது, அவர்கள் எடுத்த ஒரே நடவடிக்கை அவரது இருக்கையை மாற்றியது மட்டுமே.

விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் அதே வேளையில், சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

திவ்யாவின் இந்த புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரையுலகைச் சேர்ந்தவர்களும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in