`நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்?'- சாய் பல்லவிக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை திவ்யா

`நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்?'- சாய் பல்லவிக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை திவ்யா

நடிகை சாய் பல்லவிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகை திவ்யா ஸ்பந்தனா, அவரை ட்ரோல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம் என்றும் வினா எழுப்பியுள்ளார்.

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில் இந்து பண்டிதர்கள் கொல்லப்படுவது குறித்தும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்த நடிகை சாய் பல்லவி, "காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் இந்து பண்டிதர்கள் கொல்லப்படுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டது. அண்மையில் இஸ்லாமியர் ஒருவர் மாட்டைக் கொண்டு சென்றபோது அவரை ஒருசிலர் ஜெய் ஸ்ரீராம் என சொல்லுமாறு துன்புறுத்தி உள்ளனர். இந்த 2 நிகழ்வுகளுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?" என கொந்தளித்திருந்தார்.

சாய் பல்லவியின் இந்த பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் நடிகை சாய் பல்லவி மீது ஹைதராபாத் சுல்தான் நகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், "காஷ்மீர் பயங்கரவாதிகளையும் பசு பாதுகாவலர்களையும் சமம் என்ற நோக்கில் சாய் பல்லவி பேட்டியளித்துள்ளார். அவர் மீதும், 'விராட பர்வம்' பட இயக்குநர் வேணு உடுகுலா மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சாய் பல்லவிக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்துள்ளார். "சாய் பல்லவியை ட்ரோல் செய்வதை நிறுத்த வேண்டும். பெண்களுக்கு மட்டும் கருத்து சுதந்திரம் இல்லையா? நல்ல மனிதனாக இருங்கள் என்று யாராது சொன்னா தேச விரோதி என்று முத்திரை குத்துகிறார்கள். வெறுப்பை உமிழ்பவர்களை, ஹீரோக்கள் என பாராட்டுகிறார்கள். எப்பப்பட்ட உலகில் வாழ்கிறோம்" என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in