காருக்குள் மேக்கப், சுட்டெரிக்கும் வெயில்... ’கல்கி 2898 ஏடி’ படத்தில் சுவாரஸ்ய மேக்கிங் ஸ்டில்ஸ்!

’கல்கி 2898 ஏடி’
’கல்கி 2898 ஏடி’

காருக்குள் மேக்கப், சுட்டெரிக்கும் வெயிலில் ஷூட்டிங் என ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் சுவாரஸ்ய மேக்கிங் புகைப்படங்களை அதன் நாயகி திஷா பதானி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் பாடல் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் இத்தாலி பறந்தது படக்குழு. இந்த பிடிஎஸ் புகைப்படங்களை நடிகை திஷா பதானி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுட்டெரிக்கும் வெயில், காற்று, குளிர் என இத்தாலியில் படுத்தியெடுத்த அந்த காலநிலையில் நடிகர் பிரபாஸ் மற்றும் படக்குழுவினருடன் காருக்குள் அமர்ந்து மேக்கப் போட்டிருக்கிறார் திஷா.

என்னதான் இத்தாலியின் கிளைமேட் படப்பிடிப்பின் போது வாட்டி எடுத்திருந்தாலும் தனக்கு மகிழ்ச்சியான அனுபவமாகவே ‘கல்கி 2898 ஏடி’ இருந்ததாக திஷா சொல்லி இருக்கிறார்.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே என இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் படமாக உருவாகி வருகிறது 'கல்கி 2898 ஏடி'. பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை மகாபாரத்தில் இருந்தே தொடங்குவதாக இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொல்லி இருந்தார்.

மேலும், “மகாபாரதக் காலக்கட்டத்தில் தொடங்கும் இந்தக் கதை அதன் பிறகு 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுகிறது. அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயன்றுள்ளோம். இதை முடிந்த வரை இந்திய பின்னணியிலேயே உருவாக்கியுள்ளோம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   

இன்று மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை... சிக்காத சிறுத்தையால் தவிக்கும் வனத்துறை!

இன்று முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சதி... பாகிஸ்தானியர் உள்பட மூவர் கைது!

பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை... அதிர விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்!

அரசு மருத்துவமனை வாசலில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்... விரட்டியடித்த 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in