தற்கொலை முயற்சியா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகையால் பரபரப்பு

தற்கொலை முயற்சியா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகையால் பரபரப்பு

இளம் நடிகை ஒருவர், அதிகமானத் தூக்க மாத்திரையை உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இளம் மலையாள நடிகை, மயங்கிய நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தூக்க மாத்திரையை தவறுதலாக அதிகம் உட்கொண்டதால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏறப்ட்டது என்றார். தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார். சிகிச்சைக்குப் பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், இந்த இளம் நடிகை சாட்சியாக இருக்கிறார். இந்த வழக்கில் முதலில் நடிகர் திலீப்புக்கு எதிராகக் கருத்துக் கூறிய சாட்சிகள், இப்போது மாறி வருவதால், மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் செய்தி பரவி வருகிறது.

பிறழ் சாட்சிகளாக மாறியவர்களின் வங்கிக் கணக்குகளை போலீசார் ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த நடிகையின் தூக்க மாத்திரைப் பிரச்னைக்கும் நடிகை கடத்தப்பட்ட வழக்கின் சமீபத்திய விசாரணை முன்னேற்றங்களுக்கும் தொடர்பில்லை என்று குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு அதிக தூக்க மாத்திரை உட்கொண்ட நடிகையின் பெயரையும் போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in