நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை தீபிகா படுகோன்

நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை தீபிகா படுகோன்

மனஅழுத்தத்தின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அனுமதிக்கப்பட்ட செய்தி அவர் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு சமீபத்தில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அரை நாள் வரை மருத்துவமனையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மன அழுத்தத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் தீபிகா படுகோன் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பின் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in