
நடிகர் ரன்வீரைக் காதலித்த கதையை நடிகை தீபிகா படுகோனே தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பாலிவுட்டில் பிரபலமான நிகழ்ச்சி ‘காஃபி வித் கரண்’. கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். பல நேரங்களில் பிரபலங்களின் பதில்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அந்த வகையில், இதன் ஏழாவது சீசன் முடிந்து தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது.
இதில் பாலிவுட்டின் காதல் ஜோடிகளான தீபிகா மற்றும் ரன்வீர் இருவரும் கலந்து கொண்டுள்ள எபிசோட் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோன் ரன்வீருடன் காதலில் இருந்த போதே, இரண்டு ஆண்களுடன் டேட்டிங் செய்ததையும் குறிப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆனால், மனம் என்னவோ திரும்ப ரன்பீரிடம்தான் வந்தது என தீபிகா கூறியுள்ளார். ரன்பீரும் அவர்கள் யார் என்று எனக்குத் தெரியும் என அந்த நிகழ்ச்சியில் சிரித்துக் கொண்டே பேசியுள்ளார். தீபிகா-ரன்பீர் இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என சமீபத்தில் வதந்தி பரவிய நிலையில், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை இருவரும் இப்படி மாறி மாறி பகிர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!