அட்ஜெஸ்மென்ட் தேவை எனக்கில்லை... அடித்துப் பேசிய சின்னத்திரை நடிகை!

நடிகை ஆர்த்திகா
நடிகை ஆர்த்திகா

"வாய்ப்புகளுக்காக அட்ஜெஸ்மென்ட் செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. இந்த வேலை இல்லை என்றாலும் வேறு வேலை செய்ய எனக்குத் தெரியும்” என சின்னத்திரை நடிகை ஆர்த்திகா கூறியுள்ளார்.

ஆர்த்திகா
ஆர்த்திகா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆர்த்திகா. இவருக்கு சமீப்த்தில் திருமணம் நடந்து முடிந்தது. இவர் நடிப்புத் துறையில் வாய்ப்புகளுக்காக அட்ஜெஸ்மென்ட் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அதிரடியாக பதில் சொல்லி இருக்கிறார். “வாய்ப்பும் பணமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அட்ஜெஸ்மென்ட் செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை. என் திறமைக்கு என்ன வாய்ப்பு வருகிறதோ அதுவே மகிழ்ச்சி. அதற்காக, கடவுளுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

அப்படி செய்தால்தான் வாய்ப்பு வரும், இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியும் என்றெல்லாம் இல்லை. அப்படியான சூழ்நிலை வந்தால் எனக்கு நடிப்பதைத் தவிர்த்து வேறு வேலைகளும் தெரியும்” என்றார்.

ஆர்த்திகா
ஆர்த்திகா

மேலும், “அப்படி வாய்ப்புகளுக்காக அட்ஜெஸ்மென்ட் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால், துறைக்குள் புதிதாக வருபவர்களிடமும் அதை எதிர்பார்க்கிறார்கள். எனக்கு கவர்ச்சியாக நடிக்கப் பிடிக்காது. அதை முன்பே தயாரிப்பாளர்களிடமும் இயக்குநரிடமும் சொல்லி விடுவேன். அதனால், எனக்கு சம்பளம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை” என்று பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in