ஹேம்நாத்துக்கு எதிராக சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை அதிரடியாக பதில் மனு!

ஹேம்நாத்துக்கு எதிராக சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை அதிரடியாக பதில் மனு!

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த வழக்கில் சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை அதிரடியாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைதான சித்ராவின் கணவர் ஹேம்நாத் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே, சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள், பிரபலம், பணம் படைத்தவர்கள் என பலருக்கு தொடர்பு இருக்கிறது" என்று கூறி பரபரப்பை பற்ற வைத்தார் ஹேம்நாத்.

இந்நிலையில், சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்ததோடு, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதன் பின்னர், இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார்.

அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்த பதில் மனுவில், ஹேம்நத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த சித்ரவதை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்துகொண்டார். ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in