கணவர், மாமனார் மீது நடிகை பரபரப்பு புகார்

கணவர், மாமனார் மீது நடிகை பரபரப்பு புகார்

தனது வங்கிக் கணக்கை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்ததாக கணவர் மற்றும் மாமனார் மீது நடிகை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

பிரபல கன்னட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி (36). இவர், 'குரு சிஷ்யரு, ஸ்ரீதனம்மா தேவி' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் கணவர் பாலாஜி. இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் நடிகை சைத்ரா, தன் கணவர், மாமனார் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதில், தனக்குத் தெரியாமல் தன் வங்கி கணக்கின் மூலம், போலி கையெழுத்திட்டு நகை கடன் பெற்றுள்ளனர் என்றும் வங்கி கிளை மேலாளரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் என்றும் இதுபற்றி கேட்ட போது, கணவரும், மாமனாரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் அவரது கணவர் பாலாஜி, மாமனார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தன்னை அடித்ததாக கணவர் பாலாஜி மீது கடந்த 2018-ம் ஆண்டும் சைத்ரா, போலீஸில் புகார் அளித்திருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in