5 வருடத்துக்குப் பிறகு மலையாளப் படப்பிடிப்பில் பாவனா: உற்சாக வரவேற்பு!

5 வருடத்துக்குப் பிறகு மலையாளப் படப்பிடிப்பில் பாவனா: உற்சாக வரவேற்பு!

5 வருடங்களுக்குப் பிறகு மலையாள படப்பிடிப்புக்கு வந்த பாவனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

மலையாள நடிகை பாவனா, தமிழ், கன்னடம் என பலமொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். கடைசியாக 2017-ல் வெளிவந்த ’ஆதம் ஜான்’ என்ற மலையாளப் படத்தில் பிருத்விராஜுடன் நடித்திருந்தார். கடந்த ஐந்து வருடங்களாக மலையாள சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ஆனால், கன்னடப் படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதிய மலையாளப் படத்தில் நடிக்க பாவனா ஒப்பந்தமானார். 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' (Ntikkakkakkoru Premondarnn) என்ற அந்தப் படத்தின் ஷூட்டிங், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் தொடங்கியுள்ளது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படப்பிடிப்புக்கு வந்த நடிகை பாவனாவுக்கு படக்குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் இந்தப் படத்தில் ஷராபுதீன், அனார்க்கலி நாசர், அர்ஜுன் அசோகன், செபின் பென்சன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in