ஆஜராக சொன்ன போலீஸ்... நடிகை காவ்யா மாதவன் அனுப்பிய அதிரடி பதில்

ஆஜராக சொன்ன போலீஸ்... நடிகை காவ்யா மாதவன் அனுப்பிய அதிரடி பதில்

``சென்னையில் இருப்பதால் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராக முடியாது'' என்று குற்றப்பிரிவு போலீஸாரிடம் நடிகை காவ்யா மாதவன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட 7 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆடியோ வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. .

இதனால் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் தன்னால் விசாரணைக்கு இன்று ஆஜராக முடியாது என்று காவ்யா மாதவன் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

தான் சென்னையில் இருப்பதால் 11-ம் தேதி ஆஜராக முடியாது என்றும் 13-ம் தேதி தன் வீட்டில் வைத்து விசாரணை நடத்தலாம் என்றும் குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுப்பியுள்ள தகவலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in