அடுக்குமாடியில் போதைப்பொருள் விற்ற நடிகை கைது: சுவர் ஏறி குதித்து தப்பிய வாலிபர்

நடிகை அஞ்சு கிருஷ்ணா
நடிகை அஞ்சு கிருஷ்ணாஅடுக்குமாடியில் போதைப்பொருள் விற்ற நடிகை கைது: சுவர் ஏறி குதித்து தப்பிய வாலிபர்

அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்குப் பிடித்து ஆண் நண்பருடன் தம்பதி போல வேடமிட்டு போதைப்பொருள் விற்பனை செய்த நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்ட சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது  செய்யப்பட்ட நடிகை அஞ்சு கிருஷ்ணா.
கைது செய்யப்பட்ட நடிகை அஞ்சு கிருஷ்ணா.அடுக்குமாடியில் போதைப்பொருள் விற்ற நடிகை கைது: சுவர் ஏறி குதித்து தப்பிய வாலிபர்

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள திருக்காக்கரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைத்தடுப்பு பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகர போலீஸார் மற்றம் திருக்கக்கரை போலீஸார், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் அந்த வீட்டில் நேற்று இரவு சோதனை செய்தனர். அப்போது அங்கு 52 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த திருவனந்தபுரம் கஜக்கூடத்தைச் சேர்ந்த நாடக நடிகை அஞ்சு கிருஷ்ணா(29) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், தப்பியோடி சுதேசி சமீருடன் தம்பதி போல இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து பெங்களூருவில் இருந்தை போதைப்பொருள் வாங்கி வந்து எர்ணாகுளம் பகுதியில் நடிகை அஞ்சு கிருஷ்ணா விற்பனை செய்தது தெரிய வந்தது. தப்பியோடி சுதேசி சமீரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in