அனுஷ்காவின் 50வது படமாக உருவாகிறது `பாகமதி2’... வெளியான அசத்தல் அப்டேட்!

நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா

சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ள நடிகை அனுஷ்காவின் 50வது படமாக ‘பாகமதி2’ உருவாக இருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ‘பில்லா’, ‘பாகுபலி’, ‘அருந்ததீ’ எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக, ‘பாகுபலி’ திரைப்படம் அவருக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்களை ஈட்டித் தந்தது. ஹீரோயின் சென்ட்ரிக் படங்களாக அவர் நடித்த ‘அருந்ததீ’, ‘பாகமதி’ போன்ற படங்களும் ஹிட் கொடுத்தது. இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களால் அனுஷ்கா சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார்.

நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா

பிறகு, ‘மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி’ படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்றது. இந்த நிலையில், அனுஷ்காவின் 50வது படமாக ‘பாகமதி2’ உருவாக இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. சமீபத்தில் அனுஷ்கா 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை ஒட்டி, இந்தத் தகவல் வெளியானது.

நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா

தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின் சென்ட்ரிக் படம் அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்தது இந்தப் படம் மட்டுமே. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in