பட வாய்ப்புகள் இல்லை... பிரபல நடிகரின் அரசியல் கட்சியில் இணையும் அனுஷ்கா?

நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். ஆனால், அவர் எதிர்பார்த்திருந்த பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்பதால் பிரபல நடிகர் ஒருவரின் கட்சியில் அவர் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

பவன் கல்யாண் - அனுஷ்கா
பவன் கல்யாண் - அனுஷ்கா

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலம் முடிவுக்கு வர இருப்பதால் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் ஆந்திராவில் நடக்க உள்ளது. ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, பாஜக மற்றும் காங்கிரஸ் என அம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி அங்கு நிலவுகிறது.

இந்த நிலையில் நடிகை அனுஷ்காவை வேட்பாளராக அறிவிக்க முடிவெடுத்து இருக்கிறார் நடிகர் பவன் கல்யாண். குறிப்பாக நகரி தொகுதி அனுஷ்காவுக்கு ஒதுக்கப்படலாம் எனவும் தெரிகிறது. ஏனெனில், அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் இந்த முடிவாம்.

இதுமட்டுமல்லாது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் நடிகை ரோஜா முன்பு நகரி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இதனால், அவருக்குப் போட்டியாக அனுஷ்காவை இறக்கினால் சரியாக இருக்கும் என நினைத்துள்ளாராம் பவன் கல்யாண். இது குறித்தான அறிவிப்பை வர இருக்கும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

அனுஷ்கா
அனுஷ்கா

படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடை கூட்டுவதும் குறைப்பதும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அப்படித்தான் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக நடிகை அனுஷ்கா உடல் எடை கூட்டினார். ஆனால், அதன் பிறகு அவரால் கூட்டிய உடல் எடையைக் குறைக்க முடியாமலும், சில உடல்நல பிரச்சினைகள் காரணமாகவும் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

பின்பு சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தப் பின்னர், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படம் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆனால், இந்தப் படத்திற்குப் பிறகு அவர் எதிர்பார்த்த அளவில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இதனால், அரசியல் களத்தில் இறங்க அனுஷ்கா முடிவு செய்திருப்பதாகத் தகவல் பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in