HBD Anushka: சொந்த பெயருக்கு பழக எடுத்துக் கொண்ட ஒரு வருடம்!

அனுஷ்கா
அனுஷ்கா

தன் அழகாலும், திறமையாலும் அசரடிக்கும் இந்திய சினிமாவின் ’தேவசேனை’ ஸ்வீட்டி அனுஷ்காவுக்கு இன்று 41வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலகினரும் அனுஷ்காவுக்குத் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் வேளையில் அனுஷ்கா குறித்தான சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

அனுஷ்கா
அனுஷ்கா

* துளு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அனுஷ்காவுக்கு ஆரம்ப காலத்தில் நடிப்பின் மீது துளி ஆர்வம் கூட இல்லை. பெங்களூருவில் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது அங்கு நடந்த பாரத் தாகூரின் யோகா வொர்க்‌ஷாப்பில் கலந்து கொண்டார் அனுஷ்கா. அதுதான் அவரது வாழ்வை மாற்றிய முக்கிய தருணமாக அமைந்தது.

* அதன்பிறகு, பல குழந்தைகளுக்கு யோகா சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் அனுஷ்கா. அவரது குடும்பத்தில் பலரும் டாக்டர், என்ஜினியர் என்றிருக்க அவரோ யோகா ஆசிரியர் என்ற முடிவை தைரியமாக எடுத்தார். யோகா தனக்கு பல விதங்களில் உதவியது என்றும் கூறுகிறார் அனுஷ்கா.

அனுஷ்கா
அனுஷ்காt24

* யோகா வகுப்பில் பிஸியாக இருந்தவரை இயக்குநர் மெஹர் ரமேஷ் பார்த்து விட்டு, இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் ‘சூப்பர்’ படத்தில் நடிப்பதற்கு பரிந்துரைத்தார். ஆனால், ‘சூப்பர்’ படம் மற்றும் அனுஷ்கா அடுத்து நடித்த 'மகாநந்தி’ படமும் படுதோல்வியை சந்தித்தது. யோகாவுக்கே திரும்பி விடலாம் என்று இருந்தவரின் வாழ்க்கையை மாற்றியது தான் இயக்குநர் ராஜமெளலியின் ’விக்ரமகுடு’ படத்தின் வெற்றி.

*இவரது நிஜப்பெயர் ஸ்வீட்டி. தனக்குத் தானே அவர் வைத்துக் கொண்ட பெயர்தான் அனுஷ்கா. கிட்டத்தட்ட இந்தப் பெயருக்கு பழக ஒருவருடம் ஆகியிருக்கிறது. அதன்பிறகு இந்தப் பெயரில் யார் தன்னைக் கூப்பிட்டாலும் திரும்பி பார்ப்பாராம் அனுஷ்கா.

அனுஷ்கா
அனுஷ்கா’பில்லா’ படத்தில்...

* அதன் பிறகு, ‘லக்‌ஷ்யம்’, ‘டான்’, ‘ஸ்வாகதம்’ என அனுஷ்காவிற்கு தொட்டதெல்லாம் வெற்றியாக அமைந்தது. கிளாமர், நடிப்பு என கலக்கிக் கொண்டிருந்தவருக்கு பெரிய பிரேக் கொடுத்த படங்களாக ‘பில்லா’, ‘அருந்ததி, ‘பாகுபலி’யைக் குறிப்பிடலாம்.

அனுஷ்கா
அனுஷ்கா

*அனுஷ்கா-பிரபாஸ் ஜோடி திரையில் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்த ஜோடிகளில் ஒன்று. நாற்பது வயதைக் கடந்த இவர்கள் இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க இருவரது குடும்பமும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஆனால், இருவரும் தங்கள் கரியரில் கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

*’அருந்ததி’, ‘பாகுபலி’ படங்களின் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவின் ’பாகமதி’ கமர்ஷியலாக வெற்றிப் பெற்றது. தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின் செண்ட்ரிக் படம் அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்தது இந்தப் படம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா
அனுஷ்கா

2020ம் வருடத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து சில வருடங்களுக்குப் பிரேக் எடுத்தவர் இப்போது மீண்டும் ‘மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி’ மூலம் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துகள் அனுஷ்கா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in