நடிகை அஞ்சலி நாயர் 2வது திருமணம்!- உதவி இயக்குநரை மணந்தார்

நடிகை அஞ்சலி நாயர் 2வது திருமணம்!- உதவி இயக்குநரை மணந்தார்
நடிகை அஞ்சலி நாயர் - உதவி இயக்குநர் அஜித் ராஜு

நடிகை அஞ்சலி நாயர் உதவி இயக்குநர் அஜித் ராஜுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

மாடலும், திரைப்பட நடிகையுமான அஞ்சலி நாயர், மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றிருக்கிறார். தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கு முன்பு, 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.

ஏற்கெனவே திருமணமான அஞ்சலி நாயருக்கு அவனி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், உதவி இயக்குநர் அஜித் ராஜு என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். இந்த தகவலை அஜித் ராஜு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஜோடிக்கு திரையுலகினர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.