`இதைக் கேட்டால் என்னைக் கொன்று விடுங்கள் என்று சொல்வேன்'- நடிகை ஆண்ட்ரியா வேதனை

`இதைக் கேட்டால் என்னைக் கொன்று விடுங்கள் என்று சொல்வேன்'- நடிகை ஆண்ட்ரியா வேதனை

நடிகை ஆண்ட்ரியாவின் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வரும் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படத்திற்காக நடிகை ஆண்ட்ரியா காமதேனு யூடியூப் தளத்திற்காகக் கொடுத்துள்ள பிரத்யேக நேர்காணலில் இந்தப் படத்தில் பெண்களுக்கு நடந்துள்ள வன்புணர்வு சம்பவங்களும் நிஜத்தில் தான் இதை எப்படிப் பார்க்கிறேன் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, “இந்தப் படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். அதில் மதியை வன்புணர்வு செய்வார்கள். நிஜத்தில் எனக்கு அதுபோன்று நடந்தது இல்லை. ஆனால், நிறைய பெண்களுக்கு நடக்கிறது. பாலியல் ரீதியிலான துன்புறுத்தால் என்றால் சில சமயங்களில் எனக்கும் நடந்திருக்கிறது. மாலை நேரங்களில் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று யாராவது என்னை பின்னால் தட்டி விட்டு செல்வார்கள் அல்லது அத்துமீறல்கள் நடக்கும். கலைநிகழ்ச்சிகளிலும் இதுபோன்று நடக்கும். என்ன நடந்தது என்று உணர்வதற்குள்ளேயே ஓடி விடுவார்கள். ஆண்கள் என்றாலே அப்படிதான் நடந்து கொள்வார்கள் என இயல்பாக்கி விடுகிறார்கள். இது நார்மலான விஷயம் கிடையாது. இதுவே பாலியல் வன்கொடுமை என்ற நிலைக்கு வரும்போதுதான் ‘அய்யய்யோ’ என்று பதறுவார்கள்.

ஆரம்ப நிலைகளிலேயே இதைக் கண்டித்து இருந்தால் பாலியல் வன்கொடுமை என்ற நிலைக்கு வராது. அதைத்தான் நாம் செய்ய தவறுகிறோம். என்னிடம் வந்து ஒரு இக்கட்டான சூழலில் கொலையா? பாலியல் வன்கொடுமையா? என்று கேட்டால், என்னைக் கொன்று விடுங்கள் என்று சொல்வேன். அதனால்தான் இந்தக் கதையும் எனக்குப் பிடித்திருந்தது. இந்தக் கதையில் மதி ஒரு ‘Rape Survivor’” என்று கூறியுள்ளார் ஆண்ட்ரியா.

இதுமட்டுமல்லாது, வெற்றிமாறன் இந்தப் படத்திற்குள் தயாரிப்பாளராக உள்ளே வந்தது, திருமணம்- லிவ்வின் ரிலேஷன்ஷிப் குறித்தான தன்னுடைய கருத்து என பல விஷயங்களைப் பேசி இருக்கிறார் ஆண்ட்ரியா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in