சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை திடீர் மரணம்

சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை திடீர் மரணம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை மரணமடைந்தார்.

பிரபல மலையாள நடிகை அம்பிகா ராவ். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், மீசை மாதவன், தமாஷா, வைரஸ், கும்பளங்கி நைட்ஸ் உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சால்ட் அண்ட் பெப்பர், தொம்மனும் மக்களும், ராஜமாணிக்யம், வெள்ளிநட்சத்திரம் உட்பட பல படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினை இருந்தது. அதற்காக திருச்சூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கும் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 58.

அவர் மறைவுக்கு மலையாள திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த அம்பிகா ராவுக்கு ராகுல், சோஹன் என்ற மகன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in