’ஆடுஜீவிதம்’ படத்தைப் போல நிஜத்திலும் நடந்தது... அமலாபால் ஆச்சரியம்!

'ஆடுஜீவிதம்’ படத்தில்
'ஆடுஜீவிதம்’ படத்தில்

’ஆடுஜீவிதம்’ படத்தைப் போலத் தனக்கு நிஜத்திலும் நடந்த சம்பவம் குறித்து நடிகை அமலாபால் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதைக் கவனித்த ரசிகர்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

’தி கோட் லைஃப்’ என்ற நிஜ நாவலைத் தழுவி ‘ஆடுஜீவிதம்’ படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பிளெஸ்ஸி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். பிழைப்புக்காக வெளிநாடு வேலைக்கு செல்லும் ஒருவன் பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு ஆடு மேய்ப்பவனாக காலம் கழித்ததுதான் ‘ஆடுஜீவிதம்’ கதை. இது நஜீப் என்பவரின் உண்மைக் கதை. நஜீப்பின் மனைவி சய்னு என்ற கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.

படம் குறித்தானத் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்தப் படத்திற்கும் தனது நிஜ வாழ்க்கைக்குமான ஆச்சரிய ஒற்றுமை ஒன்றைப் பகிர்ந்துள்ளார் அமலா.

'ஆடுஜீவிதம்’ படத்தில்
'ஆடுஜீவிதம்’ படத்தில்

அதாவது, “நஜீப், சய்னாவை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் போது அவள் கர்ப்பமாக இருப்பாள். அதனால், படப்பிடிப்பில் நான் வயிற்றில் பேட் வைத்து நடித்தேன். ஆச்சரியமாக இந்தப் படம் வெளியாகும் இந்த சமயத்திலும் நான் நிஜமாக கர்ப்பமாக உள்ளேன். இது எதிர்பாராத ஒற்றுமை எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. அந்த உற்சாகத்தோடு நான் படம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறேன்” எனக் கூறியுள்ளார் அமலாபால்.

அமலாபாலுக்கும் ஜெகத் தேசாய் என்ற தொழிலதிபருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில வாரங்களிலேயே அமலாபால் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

‘சிங்கத்தின் கோட்டைக்குள்ள ஆடு சிக்கிடுச்சு... அண்ணாமலையை விமர்சிக்கும் கோவை அதிமுக!

வேறு வழி தெரியவில்லை... கடிதம் எழுதி விட்டு மகளுடன் தம்பதியர் தற்கொலை!

அதிர்ச்சி... போலீஸ் தாக்கியதில் கால் டாக்சி ஓட்டுநர் உயிரிழப்பு?

டாக்டர் ராமதாஸூக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்... அதிர வைத்த பிரபல தயாரிப்பாளர்!

களத்தில் இறங்குகிறார் எஸ்.பி.வேலுமணி... செம குஷியில் கோவை, நீலகிரி அதிமுக வேட்பாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in