#MetGala2024: 163 நபர்கள், 1965 மணிநேர உழைப்பு... அலியா பட் புடவையின் டாப் சீக்ரெட்!

அலியா பட்
அலியா பட்

அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் நடிகை அலியாபட் புடவையில் சென்று அசத்தி இருக்கிறார். அதுபோல, கடந்த வருடம் தங்கள் ஃபேஷன் உடைகளால் கவனம் ஈர்த்த நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே இந்த வருடம் மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒவ்வொரு வருடம் ‘மெட் காலா’ எனும் ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள நடிகர்கள், இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலதுறை சேர்ந்த பிரபலங்கள் பலரும் வித்தியாசமான ஃபேஷன் உடை அணிந்து வந்து அசத்துவார்கள்.

மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காகதான் இந்த நிகழ்ச்சி. நேற்று மாலை தொடங்கிய இந்த நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது. இதில் அலியாபட் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அணிந்து வந்திருந்த புடவைதான் அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்தப் புடவையில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘இயற்கைதான் எல்லாவற்றிலும் பெரிது! இதை வைத்துத்தான் என் புடவை தீமை உருவாக்கினோம். எம்ப்ராய்டரி, பீட்ஸ், விலைமதிப்பற்ற ஸ்டோன்ஸ் இவற்றை வைத்து 1920களின் ஸ்டைலில் இந்தப் புடவையும் என்னுடைய மேக்கப், ஹேர்ஸ்டைலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புடவையின் நிறம் பூமி, வானம், கடல் என இயற்கையை பிரதிபலிக்கிறது.

நடிகை அலியா பட்
நடிகை அலியா பட்

இந்தப் புடவையை உருவாக்க 163 பேர் வேலை பார்த்திருக்கிறார்கள். இந்த சேலையை செய்ய மாஸ்டர் கைவினைஞர்கள், எம்ப்ராய்டரி கலைஞர்கள், டை கலைஞர்கள் எனப் பலரும் சேர்ந்து 1965 மணி நேர உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி உருவான இந்தப் புடவை பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி!’ என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார் அலியா பட்.

அலியா தீம் புடவையில் கத்ரீனா கைஃப்...
அலியா தீம் புடவையில் கத்ரீனா கைஃப்...

ஆனால், அலியாவின் இந்த புடவை தீம் நடிகைகள் கத்ரீனா கைஃப், தீபிகா படுகோனே முன்பே அணிந்திருக்கிறார்கள் எனவும் அவர்களைப் பார்த்து அலியா காப்பி அடித்துவிட்டார் எனவும் ஒருபக்கம் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த வருடம் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவும் கலந்து கொண்டனர். ஆனால், இந்த வருடம் வேலை காரணமாக அவர்கள் மிஸ்ஸிங்! தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும் இதில் கலந்து கொண்டார்.

மெட் காலா 2024 நிகழ்ச்சியில் அமெரிக்க நடிகை ஜெண்டயா
மெட் காலா 2024 நிகழ்ச்சியில் அமெரிக்க நடிகை ஜெண்டயா

மெட் காலா நிகழ்ச்சியின் டிக்கெட் விலை இந்த வருடம் 75,000 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 62 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in