என்னுடையவன்... காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த சின்னத்திரை நடிகை!

அக்‌ஷிதா- ப்ரீத்தம் சுரேஷ்
அக்‌ஷிதா- ப்ரீத்தம் சுரேஷ்

'தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை அக்‌ஷிதா தன்னுடைய காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் முடித்திருக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து 'என்னுடையவன்' என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

’அழகு’, ‘கண்ணானே கண்ணே’, ‘சீதா ராமன்’ உள்ளிட்டப் பல சீரியல்களில் நடித்தவர் நடிகை அக்‌ஷிதா. இவரை விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் பிரபலமடைய வைத்தது. இதில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். ஆனால், இவரது கதாபாத்திரம், சீரியல் கதையில் கொலை செய்யப்பட்டு இறப்பது போன்று அமைத்திருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

சீக்கிரம் அவர் புதிய சீரியலில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இப்படியான சூழ்நிலையில்தான், மேக்னா தனது காதலர் ப்ரீத்தம் சுரேஷுடன் நேற்று நிச்சயதார்த்தம் முடித்திருக்கிறார்.

இவர் உதவி இயக்குநராகவும், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராகவும் இருக்கிறார். கூர்க் பாரம்பரிய முறைப்படி இவர்களது நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘என்னுடையவன்! என்னுடைய கையில் இனி புதிய நகை ஒன்று ஜொலிக்கப் போகிறது. இனிமையான தொடக்கம்’ எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு சின்னத்திரையினரும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in