சூப்பர் ஸ்டார் நடிகரிடம் ஆசி பெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன்

சூப்பர் ஸ்டார் நடிகரிடம் ஆசி பெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன்

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரைச் சந்தித்து ஆசிப் பெற்றுள்ளார்.

நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், தெலுங்கு ஹீரோ விஷ்வக் சென் நடிக்கும் படத்தை இப்போது இயக்குகிறார். இன்னும் பெயரிடப் படாத இந்தப் படத்தின் மூலம், தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்துகிறார். இதில் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ’கே.ஜி.எஃப்’ இசை அமைப்பாளர் ரவி பஸ்ருர் இசையமைக்கிறார். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இயக்குநர் கே.விஸ்வநாத்துடன் அர்ஜுன், ஐஸ்வர்யா
இயக்குநர் கே.விஸ்வநாத்துடன் அர்ஜுன், ஐஸ்வர்யா

ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜுன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதன் தொடக்க விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா அர்ஜுன், பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்தை சந்தித்து ஆசிப் பெற்றுள்ளார்.

கிருஷ்ணாவுடன் அர்ஜுன், ஐஸ்வர்யா
கிருஷ்ணாவுடன் அர்ஜுன், ஐஸ்வர்யா

அவர் காலில் விழுந்து ஆசிப் பெற்ற அவர், பின்னர் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரும் பிரபல ஹீரோ மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவையும் சந்தித்தார். அவரிடமும் ஐஸ்வர்யா ஆசி பெற்றுள்ளார். அப்போது நடிகர் அர்ஜுனும் உடன் இருந்தார்.

இந்தப் புகைப்படங்களை படக்குழு, சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in