நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன்

HBD Amitabh | நடிகர் அமிதாப்பச்சன் பிறந்தநாள் பகிர்வு: கோடீஸ்வரனாக்கிய குரோர்பதி!

பாலிவுட் பாட்ஷா அமிதாப் பச்சனின் 81வது பிறந்தநாள் இன்று. கால் நூற்றாண்டைக் கடந்த அவரது சினிமா பயணமும், அனுபவமும் இன்றைய தலைமுறைக்கு பெரும் பாடம். மூன்று தலைமுறைகள் கண்டவரின் பிறந்தநாளில் அவர் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

* சினிமா உலகம் எப்போதுமே ஒரு மாயாஜாலம். விரும்பி வருபவர்களை விடவும் எதேச்சையாக உள் நுழைபவர்களுக்கு இன்னும் அன்பு செய்யும். அமிதாப்பச்சனுக்கும் அப்படிதான் நடந்தது. பொறியியலாளராக விரும்பி, பின்பு இந்திய விமானப்படையில் சேர ஆர்வமாக இருந்தார் அமிதாப். ஆனால், காலம் அவருக்கு வேறு திட்டங்கள் வைத்திருந்தது.

* அமிதாப் 1969ல் மிருணாள் சென்னின் திரைப்படங்களில் வாய்ஸ் ஆர்டிஸ்டாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இயக்குநர் சத்யஜித் ரே இயக்கத்தில் 1977ம் ஆண்டு வெளியான திரைப்படமான 'ஷத்ரஞ்ச் கே கிலாடி'யிலும் பச்சனின் குரலைப் பயன்படுத்தினார்.

நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன்

* அமிதாப் பச்சனின் குரல் அப்போது பிரபலமானதாக இருந்தாலும் அவர் வேலை தேடும்போது, முரணாக அவரது குரல் ஆரம்ப காலத்தில் அகில இந்திய வானொலியால் நிராகரிக்கப்பட்டது.

*'சாத் ஹிந்துஸ்தானி' படத்தில் தான் முதன் முறையாக நடிகராக அறிமுகமானார் அமிதாப். படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் முதல் படத்திலேயே அறிமுக நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

நடிகர் அமிதாப்பச்சன், ஜெயா
நடிகர் அமிதாப்பச்சன், ஜெயா

* அமிதாப் பச்சன் தனது முதல் பெரிய வெற்றியான ஜஞ்சீருக்கு முன் 12 தொடர்ச்சியான தோல்விப் படங்களைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் மனைவியும், நடிகையுமான ஜெயாவுடன் திருமணம் ஆனதும் அந்த அதிர்ஷ்டம் தொடர்ந்து பல வெற்றிகளைக் கொடுத்தது என இன்று வரை உறுதியாக நம்புபவர்.

* அமிதாப்பின் உண்மையான குடும்பப்பெயர் ஸ்ரீவஸ்தவா. அவரது தந்தை பச்சன் என்ற புனைப்பெயரை பயன்படுத்தி வந்தார். எனவே, அமிதாப்பும் பச்சன் என்ற அந்தப் பெயரையே தனது குடும்பப் பெயராக பயன்படுத்தினார்.

* அமிதாப் பச்சனுக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறது. அதேபோல, மயஸ்தீனியா கிராவிஸ் எனப்படும் அரிய தசைக் கோளாறும் அவருக்கு உள்ளது.

நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன்

* அவரது தந்தை ஹரிவன்ஷ்ராய் பச்சன் அமிதாப் எனும் பெயரை முடிவு செய்வதற்கு முன் அவருக்கு இன்குலாப் என்று பெயரிட விரும்பினார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கம் அவர் தந்தையை ஈர்க்க அதையே அமிதாப்புக்கு சூட்டினார்.

*1984 ஆம் ஆண்டு அரசியலுக்குள்ளும் நுழைந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து மூன்று வருடங்கள் இருந்தார்.

நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன்

* தொடர்ந்து படங்கள் தயாரித்து தோல்வி அடைய, தான் இத்தனை வருடங்களில் சம்பாதித்ததையெல்லாம் இழந்து நிற்கும் நிலைக்கு சென்ற அமிதாப், ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியாமல், வீட்டை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதில் இருந்து மீள அவருக்கு பெரிதும் கைக்கொடுத்தது 'கெளன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி. பதிமூன்றாவது சீசனைத் தொட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டதையும் நெகிழ்ச்சியாகக் பகிர்ந்திருக்கிறார் அமிதாப்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in