வருங்கால மனைவி ஐஸ்வர்யாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய உமாபதி... க்யூட் வீடியோ!

உமாபதி- ஐஸ்வர்யா
உமாபதி- ஐஸ்வர்யா

நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த மாத இறுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் உமாபதியின் பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் ஐஸ்வர்யா.

உமாபதி- ஐஸ்வர்யா
உமாபதி- ஐஸ்வர்யா

’பட்டத்து யானை’, ’சொல்லி விடவா’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் ரம்பி ராமையாவின் மகன் உமாபதி. இவர் ’அதாகப்பட்டது மகாஜனங்களே’, ’மணியார் குடும்பம்’, ’தண்ணி வண்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அர்ஜூன் தொகுத்து வழங்கிய ’சர்வைவர்’ நிகழ்ச்சியின் வாயிலாக உமாபதி - ஐஸ்வர்யா நட்பு உருவானது. இருவரின் நட்பும் அடுத்தக்கட்டமாக காதலாக மாறியது. சில வருடங்கள் காதலை தொடர்ந்த இந்த இளம்ஜோடி வாழ்க்கையில் இணைவதற்கு, பெற்றோரின் அனுமதி மற்றும் ஆசிர்வாதம் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரியில் உமாபதி - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களது திருமண நிச்சயம் கடந்த மாத இறுதியில் இருவீட்டு பெரியவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது. இந்த நிலையில், உமாபதி தன் பிறந்தநாளை ஐஸ்வர்யாவுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in