நடிகர் விஷால், கார்த்தி, நாசருக்கு வாட்ஸ் அப்பில் கொலைமிரட்டல்: நடிகர் சங்கத்தில் பரபரப்பு

நடிகர் விஷால், கார்த்தி, நாசருக்கு வாட்ஸ் அப்பில் கொலைமிரட்டல்: நடிகர் சங்கத்தில் பரபரப்பு

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேலாளராக பணியாற்றி வருபவர் தர்மராஜ்(36). இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், " தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளாளராக கார்த்தி ஆகியோர் இருந்து வருகின்றனர். நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள கோடம்பாக்கத்தை சேர்ந்த துணை நடிகர் ராஜதுரை என்பவர் சங்க நிர்வாகிகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த மே 27-ம் தேதி ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த ஆடியோவில் சங்க நிர்வாகிகளை மிகவும் அசிங்கமாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் ராஜதுரை பேசியுள்ளார். இதனால் உடனே ராஜதுரை மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in