ஏன் சங்கத்தில் இருந்து உங்களை நீக்கக்கூடாது?: கே.பாக்யராஜுக்கு நடிகர் சங்கம் திடீர் நோட்டீஸ்

ஏன் சங்கத்தில் இருந்து உங்களை நீக்கக்கூடாது?:  கே.பாக்யராஜுக்கு  நடிகர் சங்கம் திடீர் நோட்டீஸ்

சங்கத்திலிருந்து ஏன் உங்களை ஏன் நீக்கக் கூடாது என நடிகர் கே.பாக்யராஜுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். சங்கரதாசாணியினர் ஐசரி கணேசனின் தூண்டுதலின் பேரில் போட்டியிட்டதாக கூறப்பட்டது. மேலும் தேர்தலை நடத்தக் கூடாது என சில உறுப்பினர்களால் வழக்குகள் தொடரப்பட்டன. இருந்தாலும் 2019 ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனாலும் அந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனால் இரண்டரை ஆண்டுகள் வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் கடந்த மார்ச் 20-ம் தேதி நடிகர் சங்கத்தின் வாக்குகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி எண்ணப்பட்டன. அதில் நாசர் தலைமையிலான அணியினர் வெற்றியடைந்தனர். இந்த நிலையில் தேர்தலில் வெற்றியடைந்து நாசர் விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணியினர் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் சார்பில் நடிகர் கே.பாக்யராஜுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை நடிகர் சங்கத்துடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறார்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக, சில உறுப்பினர்களின் தூண்டுதல் பெயரில் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலை செய்துள்ளீர்கள். மேலும் சட்ட விதிகளுக்கு எதிராக இதை செய்திருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து செயற்குழுவில் முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்திலிருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதம் அனுப்பி உள்ளனர். இது தமிழ் திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in