மும்பையில் மகளுக்காக ரூ. 250 கோடியில் பிரம்மாண்ட பங்களா... ஆச்சரியப்படுத்தும் ரன்பீர்- அலியா தம்பதி!

குழந்தையுடன் ரன்பீர்- அலியா.
குழந்தையுடன் ரன்பீர்- அலியா.

பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக இருக்க வேண்டும் என தங்களது மகள் ராஹா பெயரில் நடிகர்கள் ரன்பீர்- அலியா தம்பதி ரூ. 250 கோடி ரூபாயில் சொத்து வாங்க இருக்கிறார்களாம். இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மகளுடன் ரன்பீர் கபூர்...
மகளுடன் ரன்பீர் கபூர்...

திருமணமான நடிகர்கள் ரன்பீர்- அலியா தம்பதிக்கு ராஹா என்ற பெண் குழந்தை பிறந்தது. தந்தை ரன்பீர் போலவே இருக்கும் ராஹாவின் க்யூட்டான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்குவார்கள். ஒரு வயது நெருங்க இருக்கும் ராஹாவை பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறது ரன்பீர்- அலியா தம்பதி.

அதாவது மும்பை பாந்த்ரா பகுதியில் நடிகர்கள் ரன்பீர்- அலியா ஐந்து தளங்கள் கொண்ட பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வருகின்றனர். இதன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் பணிகளை சென்று மேற்பார்வையிட்டனர்.

அலியா - ரன்பீர்
அலியா - ரன்பீர்

இந்த வீட்டின் பணிகளை முழுதாக முடிக்க கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் எடுக்கும் என்கிறார்கள். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் கிட்டத்த ரூ. 250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டை தங்கள் மகள் ராஹா பெயரில் பதிவு செய்ய இருக்கிறார்கள் ரன்பீர்- அலியா.

இதன் மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக ராஹா இருப்பார். இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in