அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா... நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் பங்கேற்பு!

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா... நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் பங்கேற்பு!

அயோத்தி ராமர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பல்வேறு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் பங்கேற்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ராமர் கோயில்
ராமர் கோயில்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை அடுத்து, 2.27 ஏக்கர் பரப்பளவில் மூன்றடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து, இக்கோயிலின் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்ட உள்ளது. மேலும், ராமர் சிலைக்கு வரும் ஜனவரி 22ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள மூலவர் குழந்தை ராமரின் சிலை 8 அடி உயரம், 3 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இக்கோயில் நிர்வாகம் மூலம் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

7,000 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் குறிப்பாக முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ரத்தன் டாடா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், கங்கனா ரணாவத் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பிரதிஷ்டை விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் பங்கேற்பது தற்போது உறுதியாகியுள்ளது.

அயோத்தியில் விருந்தினர்கள் தங்குவதற்காக மூன்று இடங்களில் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு 600 அறைகள் தயார் நிலையில் உள்ளது எனவும் ஜனவரி 23ம் தேதியில் இருந்து மக்கள் கடவுள் ராமரை தரிசிக்கலாம் எனவும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

5 மாவட்டங்களில் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு!

ராமர் கோயில் திறப்பு விழா: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்கவில்லை; என்ன காரணம்?

ஸ்ரீவைகுண்டம்: 3வது நாளாக ரயிலுக்குள் 500 பயணிகள் தவிப்பு; மீட்க வந்தது ஹெலிகாப்டர்கள்!

111 பேர் பலியான பரிதாபம்... சீனாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரயில் நிலையங்களில் ரீல்ஸ் இம்சை... இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்தே இளசுகளை எச்சரித்த போலீஸார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in