நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க முடியாது!

உச்ச நீதிமன்றம் மறுப்பு
நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க முடியாது!

2019-ல் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, வாக்குகளை 4 வாரங்களில் எண்ண வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டுமென நடிகர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, வாக்குகளை எண்ணலாம்; ஆனால் முடிவுகளை மூன்று வாரங்களுக்கு அறிவிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது. பின்னர், வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி நாகேஷ்வர ராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வாக்கு எண்ணிக்கைக்குத் தடைவிதிக்க மறுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதன் மூலம், மார்ச் 20-ம் தேதி வாக்குகளை எண்ணி முடிவுகளை வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.