ரசிகர்கள் முன் ஆலியா பட்டை அலேக்கா தூக்கினார் ரண்பீர் கபூர் (வீடியோ)

ரசிகர்கள் முன் ஆலியா பட்டை அலேக்கா தூக்கினார் ரண்பீர் கபூர் (வீடியோ)

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் ரண்பீர் கபூர், நடிகை ஆலியா பட்டை இன்று திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் முடிந்தவுடன் ரசிகர்கள் முன் தோன்றிய ரண்பீர் கபூர், ஆலிபா பட்டை அலேக்கா தூக்கினார்.

பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட் மற்றும் ரண்பீர் கபூர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது நெருக்கமாக பழகத் தொடங்கினர். இருவரும் 2018-ம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அப்போதே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.

இருவரது வீட்டிலும், இவர்களது காதலுக்கு பச்சை கொடி காட்ட, இன்று காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது. இதையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரண்பீர் கபூரின் இல்லம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதியெங்கும் நட்சத்திரங்கள் இறங்கி வந்தது போல ஜொலித்த மின் விளக்கு அலங்காரங்களை அப்பகுதி மக்கள் வெகுவாக ரசித்தனர். ரிஷி கபூர் மற்றும் நீத்து கபூர் ஆகியோரின் திருமணம் போல ரண்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் திருமணமும் செம்பூரில் உள்ள ஆர்கே இல்லத்தில் நடைபெற்றது. திருமணமான பிறகு முதல் முறையாக ரசிகர்கள் முன் தோன்றினர். இந்த ஜாேடியை பார்த்து ரசிகர்கள் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, ஆலியா பட்டை அலேக்கா ரண்பீர் கபூர் வீட்டிற்குள் தூக்கிச் சென்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.