இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2: நடிகர் யோகிபாபு- சிம்புதேவன் இணையும் சரித்திரப் படம்?

இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2: நடிகர் யோகிபாபு- சிம்புதேவன் இணையும் சரித்திரப் படம்?

நடிகர் யோகிபாபுவும், இயக்குநர் சிம்புதேவனும் புதிய படம் ஒன்றிற்காக இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு, நாசர், மனோரமா, நாகேஷ் என பலரும் நடித்திருந்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ கடந்த 2006-ம் ஆண்டு வெளியானது. வழக்கமான சரித்திர படமாக இல்லாமல் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி வெளியான இந்தத் திரைப்படம் நடிகர் வடிவேலுவின் சினிமா பயணத்திலும் மறக்க முடியாத முக்கிய படமாக அமைந்தது.

நகைச்சுவை மன்னன் புலிகேசி, மக்கள் நாயகன் உத்தமபுத்திரன் என இரண்டு கதாபாத்திரங்களில் தனது தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருப்பார் நடிகர் வடிவேலு. இதன் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பிற்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்புத் தரப்பு மற்றும் நடிகர் வடிவேலு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் பாதியில் நின்று போனது.

இந்தப் பிரச்சினை காரணமாக நடிகர் வடிவேலுவும் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘மாமன்னன்’, ‘சந்திரமுகி2 ’ என அவர் பிஸியாக நடித்து வருகிறார்.

இயக்குநர் சிம்புதேவன் யோகிபாபுவை வைத்து சரித்திரப் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் அது ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனவும், இதில் யோகிபாபுவை வேறு விதமாக காட்ட இயக்குநர் முடிவு செய்திருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

இம்சை அரசன் புலிகேசி 2-க்கான வியாபாரம், வடிவேலுவை விட யோகிபாபு எப்படி அந்தக் கதாபாத்திரத்தைக் கொண்டு செல்ல போகிறார் என்பது குறித்தான சவால்கள் இயக்குநர் முன்பு காத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in