அந்தேரி தெருவில் மயக்கமடைந்து கிடந்த ஒருவருக்கு நடிகர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து உயிரை மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையில் உள்ள அந்தேரி தெருவில் மயக்கமடைந்த ஒருவருக்கு, சின்னத்திரை நடிகர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து உயிரைக் காத்த சம்பவம் மக்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. 'ராமாயணம்' தொலைக்காட்சி தொடரில் ராமனாக நடித்தவர் குர்மீத் சவுத்ரி. அவர் தான் தற்போது மும்பையில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார்.
மும்பையில் உள்ள அந்தேரி தெருவில் சென்ற குர்மீத் சவுத்ரி, மயக்கமடைந்து விழுந்த ஒருவருக்கு உடனடியாக முதலுதவி செய்கிறார். அவரது இதயத்தை பம்ப் செய்து (சிபிஆர்) மற்றொரு நபரிடம் கால்களைத் தேய்க்கச் சொல்கிறார். அத்துடன் ஆம்புலன்ஸை வரவழைத்து மயக்கமான நபரை அங்கிருந்தவர்கள் மூலம் அனுப்பி வைத்தார். அவருக்கு சில போலீஸார் உதவி செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
விரைவான சிந்தனை, மீட்புத் திறன் ஆகியவற்றின் மூலம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளீர்கள் என்று அவரது ரசிகர்கள் அவரை மனதார பாராட்டியுள்ளனர்.குர்மீத் சவுத்ரி, ' கீத் ஹுய் சப்சே பராய்' தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார். அத்துட்ன் கிராத்திகா செங்கருக்கு ஜோடியாக 'புன்னர் விழா' படத்திலும் நடித்துள்ளார்.
'ஜலக் திக்லா ஜா 5', 'நச் பாலியே 6', மற்றும் 'கத்ரோன் கே கிலாடி 5' உள்ளிட்ட பல ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளிலும் குர்மீத் பங்கேற்றுள்ளார். 2006-ம் ஆண்டு தொலைக்காட்சி நடிகையான டெபினா பொன்னர்ஜியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!
ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!
அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!
சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!