ட்விட் போட்ட சேவாக்...பாரபட்சம் பார்க்காமல் பதிலடி கொடுத்த நடிகர் விஷ்ணுவிஷால்!

நடிகர் விஷ்ணுவிஷால், சேவாக்
நடிகர் விஷ்ணுவிஷால், சேவாக்

இந்தியா என்ற பெயரை 'பாரதம்' என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. இதற்கு கிரிக்கெட்டர் சேவாக் போட்ட ட்விட்டுக்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்திருக்கிறார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒன்று கூடியுள்ள எதிர்கட்சிகள் தங்களை இந்தியா கூட்டணி என்று அழைத்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு எதிர்மாறாக மத்திய அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ’ஒரு பெயர் என்பது நாம் பெருமிதம் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். உலகக் கோப்பையின் போது இந்திய அணி வீரர்கள் நெஞ்சில் ’பாரத்’ என இடம்பெற்றிருப்பதை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால், ’சார், இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்னும் பெயர் உங்களை பெருமிதம் கொடுக்கவில்லையா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த பதிலடிக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in