எதே... கமல்ஹாசன் சூப்பர் ஸ்டாரா?: ரஜினி பட நடிகரின் ட்விட்டால் சர்ச்சை!

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

ரஜினியின் படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் கமல்ஹாசனை சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு புகைப்படத்தை ட்விட் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் கமல்ஹாசன் மற்றும் அமீர்கானுடன் எடுத்தப் புகைப்படத்தைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கமல்ஹாசனை அவர் சூப்பர் ஸ்டார் என்று சொல்லியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் பதிவு
நடிகர் விஷ்ணு விஷாலின் பதிவு

இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த அவர் அதை எடிட் செய்துள்ளார். " ஏன் இதை மாற்றினீர்கள்? ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உத்தரவா?" என கமெண்ட்டில் சரமாரியாக கேள்வி எழுந்துள்ளது. இதற்கு நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டில், ‘சூப்பர் ஸ்டார்கள் என்றால் சூப்பர் ஸ்டார்கள் தான் என்று பதிவிட்டு இருந்த என் ட்விட்டை டெலிட் செய்து விட்டு மாற்றி ஸ்டார்கள் என்றால் ஸ்டார்கள் தான் மாற்றி பதிவிட்டேன். இதனால் நான் பலவீனமானவன் என்பது அர்த்தம் அல்ல.

என்னைப் பொறுத்தவரையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரும் அனைவரும் சூப்பர் ஸ்டார் தான். அதையும் தாண்டி நமக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அதனால், என்னை வைத்து நெகட்டிவிட்டி பரப்ப நினைக்க வேண்டாம். அன்பைப் பரப்புங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in