‘ஜெர்ஸி’ கைவிடப்பட்டதால்தான் `லால்சலாம்’ வாய்ப்பு கிடைத்தது: விஷ்ணு விஷால்

‘ஜெர்ஸி’ கைவிடப்பட்டதால்தான் `லால்சலாம்’ வாய்ப்பு கிடைத்தது: விஷ்ணு விஷால்

‘ஜெர்ஸி’ படம் கைவிடப்பட்டதால்தான் ‘லால்சலாம்’ வாய்ப்பு கிடைத்தது' என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு அடுத்து அவர் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘’ஜெர்ஸி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நான் கிரிக்கெட்டராக நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதால்தான் ’லால்சலாம்’ படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

‘லால்சலாம்’ திரைப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ராமா. இதில் கிரிக்கெட்டராக நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in