தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்?

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்?

நடிகர் தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில், ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘பா பாண்டி’. இயக்குநராக தனுஷின் அறிமுகப் படமான இது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தன்னுடைய இரண்டாவது படமாக நடிகர் நாகர்ஜூனா மற்றும் அதிதியை வைத்து ‘நான் ருத்ரன்’ என்ற படத்தை அறிவித்தார். முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையிலும், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு நடிகர் தனுஷ் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இப்போது அவர் மீண்டும் இயக்கத்திற்குத் திரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தனுஷ் கதையில் நடிகர் அவருடன் இணைந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படம் அடுத்த வருடம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் தற்போது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவரின் புதிய படமான ‘லால் சலாம்’ குறித்தான அறிவிப்பும் வெளியானது. இப்போது தனுஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் உண்மை எனில் படக்குழு அதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

நடிகர் தனுஷ் வசம் தற்போது ‘கேப்டன் மில்லன்’, ‘வாத்தி’ ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in