
தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு இனி அதிகாலை காட்சிகள் இருக்காது என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
திருச்சியில் நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஷால், 'லியோ' திரைப்படத்திற்கு போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்ய வாய்ப்பில்லை என கூறினார். தென்னிந்திய சென்சார் போர்டு அதிகாரிகள், தங்களுக்கு மிகுந்த ஆதரவு அளிப்பதாகவும், லஞ்சம் வாங்குவதில்லை எனவும் குறிப்பிட்ட விஷால், வட இந்திய சென்சார் போர்டு அதிகாரிகள் அதற்கு நேர்மாறாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, " ரசிகர்களுக்கு முன்பு அதிகாலை காட்சிகள் பார்க்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது முதல் காட்சி ஒன்பது மணிக்கும் இறுதிக்காட்சி 1:30 மணிக்கு என மொத்தம் ஐந்து காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அரசின் விதிமுறைகளை மீறி ஒன்றும் செய்ய முடியாது. இதனை ரசிகர்களும் புரிந்துகொண்டுள்ளனர். சினிமா பார்க்கும் திரையரங்குகளில் போலி டிக்கெட்டுகள் என்ற முறைகேடுகளுக்கு இனிய வாய்ப்பு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
'லியோ' படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் இன்று வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணை நாளை காலை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விஷால் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!
லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!
பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!
எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!