
நடிகர் விஷால் தான் இப்போது நடித்து வரக்கூடிய 34வது படத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக படக்குழுவினருக்கு சமபந்தி வைத்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
’தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஷால்- ஹரி கூட்டணி தற்போது ஒன்றிணைந்துள்ளது. விஷாலின் 34வது படமாக உருவாகி வரக்கூடிய இந்தப் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. அங்குள்ள மக்களின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது, சாலை வசதி அமைத்துத் தருவது போன்ற விஷயங்களை நடிகர் விஷால் இதன் படப்பிடிப்பின் போது செய்திருந்தார். இன்னும் பெயரிடப்படாத ‘விஷால் 34’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சூழலில், தீபாவளி தினமான நேற்றும் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதனால், நடிகர் விஷால் படப்பிடிப்பில் பணியாற்றும் அனைவருக்கும் அவர் தரப்பிலிருந்து சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. இந்த வீடியோவை விஷால் ரசிகர்கள் தற்போது வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.