மீண்டும் காதலில் விழுந்த நடிகர் விஷால்?

மீண்டும் காதலில் விழுந்த நடிகர் விஷால்?

நடிகர் விஷால் பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

’வீரமே வாகை சூடும்’ படத்தை அடுத்து தற்போது ‘லத்தி’, ‘துப்பறிவாளன்2’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் விஷால். இந்த நிலையில் அவர் தற்போது நடிகை அபிநயாவைக் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2009-ல் வெளியான ‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. அதன் பிறகு, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஈசன்’, ‘சீதா ராம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவருக்கும் விஷாலுக்கும் தற்போது காதல் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே நடிகர் விஷாலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து நின்று போனது. மேலும் வேறு சில நடிகைகளுடனும் காதல் என்ற செய்திகளும் இதற்கு முன்பு வந்திருந்தது. இதுமட்டுமில்லாமல், ஆந்திர அரசியலில் நடிகர் விஷால் களம் இறங்கப் போகிறார் என்ற செய்தி முன்பு வந்திருந்த போதும் அது உண்மை இல்லை என்று மறுத்தார் நடிகர் விஷால். திருமணம் குறித்து முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்றில் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன்.

நிச்சயம் காதல் திருமணம்தான் என்று சொல்லி இருந்தார் விஷால். இப்போது நடிகை அபிநயாவுடன் காதல், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in