கார்த்தி பாணிக்கு மாறிய நடிகர் விஷால்: தெறிக்க விடும் 'மார்க் ஆண்டனி' பர்ஸ்ட் லுக்

கார்த்தி பாணிக்கு மாறிய நடிகர் விஷால்: தெறிக்க விடும்  'மார்க் ஆண்டனி'  பர்ஸ்ட் லுக்

நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட் லுக் (முதல் பார்வை) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அதிக தாடி மற்றும் தலைமுடியுடன் நடிகர் கார்த்தி பாணியில் விஷால் தோற்றம் காட்டியுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் சூடும் பறக்கும் விவாதமாக மாறியுள்ளது.

நடிகர் விஷால் தற்போது 'லத்தி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். அதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதில் அதிக தாடி மற்றும் தலைமுடியுடன் துப்பாக்கியோடு இருக்கும் விஷாலின் தோற்றம் பதிவாகியுள்ளது.

இந்த தோற்றம் 'கைதி' திரைப்படத்தில் இடம்பெற்ற கார்த்தி போன்று காட்சியளிக்கிறது. 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் வருகின்றனர். அதில் ஒரு விஷாலின் தோற்றத்தை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அதேபோல் நடிகர் தனுஷ் இடம் மேலாளராக இருந்து தயாரிப்பாளராக மாறிய வினோத்குமார் மார்க் ஆண்டனி திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இவர் ஏற்கெனவே விஷால் நடிப்பில் வெளியான 'எனிமி' திரைப்படத்தை தயாரித்திருந்தார். மார்க் ஆண்டனி திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in