
படப்பிடிப்பு தளத்தில் தன்னை சந்திக்க வந்த விவசாயிகள் சாப்பிடாமல் இருப்பது தெரிந்து ஆவேசமான விஷால் தனது உதவியாளரிடம் கோபப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருச்சியில் நடைபெற்று வரும் விஷால்34 படப்பிடிப்பு தளத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நடிகர் விஷாலை சந்தித்தனர். அப்போது விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன் குறித்தும் கேட்டறிந்தார். தன்னை சந்திக்க விவசாயிகளிடம் சாப்பிட்டீங்களா? என விஷால் கேட்க, அவர்கள் மழுப்பலாக பதிலளித்தனர். இதனால் திடீர் ஆவேசமான விஷால், தனது உதவியாளரிடம் முதலில் விவசாயிகளுக்கு சாப்பாடு போடு என கடிந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதேபோன்று படப்பிடிப்பின் போது அப்பகுதியில் உள்ள மக்களின் நலன் குறித்தும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் அமைச்சர் நேருவுடன் விஷால் இருக்கும் புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!
'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!
என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!