‘லத்தி’ படப்பிடிப்பில் நடிகர் விஷால் காயம்: கேரளாவில் சிகிச்சை

‘லத்தி’ படப்பிடிப்பில் நடிகர் விஷால் காயம்: கேரளாவில் சிகிச்சை

விஷால் நடித்து சமீபத்தில் வெளியான படம், ‘வீரமே வாகை சூடும்'. இதையடுத்து அவர் நடித்துவரும் படம், ’லத்தி’. அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது. இது விஷால் நடிக்கும் 32-வது படம். நடிகர்கள் நந்தாவும் ரமணாவும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் விஷாலின் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கி வந்தனர். பீட்டர் ஹெய்ன் இந்தக் காட்சிகளை அமைத்தார். ஏற்கெனவே இதன் படப்பிடிப்பில் காயம் அடைந்திருந்த விஷால், அந்த காயத்துடனேயே, ’வீரமே வாகை சூடும்’ படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த படப்பிடிப்பில் காயம் அடைந்த இடத்திலேயே அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் கேரளாவில் புத்துணர்ச்சி சிகிச்சை பெற செல்கிறார். இதுபற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள நடிகர் விஷால், மார்ச் முதல் வாரம் ’லத்தி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வதாகக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.